ஈழத்து எழுத்தாளர் இராகவனின் இந்தச் சிறுகதைகள் வாசகரை முதலில் அதிர்ச்சிக்குள்ளாக்கும். மரபான கதையாடலை முற்றிலும் புறக்கணிக்கும் இந்தக் கதைகள் உள்ளடக்கத்திலும் மரபை மீறுபவை. புனைவு எதார்த்தம் என்ற வகைப்படுத்தல்களைக் கடந்து உருவாகியிருக்கும் பிரதிகள் இவை. இவற்றில் வினாத்தாள்களும் விளம்பரங்களும் நாடகமும் சுவரொட்டிகளும் கடிதங்களும் இன்னபிறவும் பயன்படுத்தும் இலக்கியமற்ற மொழி இலக்கியமாக உருமாற்றம் கொள்வதை அவதானிக்கலாம்.
Be the first to rate this book.