ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து ஆளையே கடிக்க வந்ததாம் நரி என்ற பழமொழி கேட்டுள்ளோம். பசுமைப் புரட்சி என்ற பெயரில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி வியாபாரங்களில் நுழைந்த பன்னாட்டு நிறுவனங்கள் இன்று நமது வாழ்வின் மூலாதாரமான விதைத் துறையிலும் நுழையவிருக்கின்றன. இதனால் வரும் அபாயத்தை எண்ணிப் பார்த்தோமேயானால் நமது வருங்காலத்தை குறித்த அச்சத்தைத் தோற்றுவிருக்கிறது. வடிவுரிமை என்ற பெயரில் நமது விதைகளை எல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள் கபளீரம் செய்யத் துவங்கிவிட்டன. இனிமேல் தனது வயலை நம்பிக் கொண்டிருந்த விவசாயி, பன்னாட்டு நிறுவனங்களை கையேந்தி இருக்க வேண்டிய நிலைவரும். எனவே இவ்வபாயம் குறித்து நம் மக்கள் சிந்திக்க, விவாதிக்க, நடைமுறைப்படுத்த இந்நூலை வெளியிடுகிறோம்
Be the first to rate this book.