எல்லாமே கற்றுக்கொண்டாகவேண்டும். எல்லாவற்றிலும் ஜொலிக்கவேண்டும். புத்தம் புதிதாகச் சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும். அத்தனைத் துறையிலும் உச்சத்தில் மட்டுமே இருக்கவேண்டும். இந்தியாவின் பெருமைக்குரிய பொறியியல் வல்லுநர் விஸ்வேஸ்வரய்யாவின் கனவு இது.
நான் மேற்கொள்ளும் அத்தனை முயற்சிகளும் சுதந்தர இந்தியாவின் எதிர்காலத்துக்காக. மலைக்க வைக்கும் வேகத்தில் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்தார் விஸ்வேஸ்வரய்யா. தானியங்கி மதகைக் கண்டுபிடித்தார். அணை கட்டுமானம் மேற்கொண்டார். வேளாண்மையில் புதுமை, பாதாளச் சாக்கடைத் திட்டம், வெள்ளத் தடுப்புத் திட்டம், சாலைகள் அமைத்தல், பராமரிப்புப் பணிகள் அடுக்கடுக்காகப் பல சாதனைகள்.
எப்படிக் கனவு காணவேண்டும்? அதை எப்படி நிறைவேற்றவேண்டும்? விஸ்வேஸ்வரய்யாவின் வாழ்க்கை நமக்குச் சொல்லித்தரும் முக்கியப் பாடங்கள் இவை.
Be the first to rate this book.