விஷ்ணுபுரம் நம் மரபின் பெரும் படிமவெளியை நவீன நாவல்வடிவுக்குள் அள்ளி நிறுத்தி ஓர் உலகை உருவாக்குகிறது. ஆகவே அது செவ்விலக்கியம். நம் செவ்வியல் ஆக்கங்களுடன் ஒப்புநிற்கும் தகுதி அதற்குண்டு என நான் நம்புகிறேன்.
ஆகவேதான் விஷ்ணுபுரம் வெளிவந்த நாட்களில் அது எதிர்கொள்ள நேர்ந்த சில்லறை விமர்சனங்கள் என்னைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. கண்டடையப்படாமல் கிடப்பதென்பது பேரிலக்கியங்களுக்குரிய இயல்பு என்ற எண்ணமே எனக்கிருந்தது. அதன் புதுமையாலும் வேகத்தாலும் விஷ்ணுபுரம் வெகுவாகக் கவனிக்கப்பட்டது, பேசப்பட்டது. தமிழில் தொடர்ச்சியாக இத்தனை வருடம் பேசப்பட்ட பிற படைப்புகள் குறைவே.
விஷ்ணுபுரம் இதுவரை தொடர்ந்து அச்சில் இருக்கிறது, சிறப்பாக விற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு ஓர் அழகிய பதிப்பு வெளியாகவில்லை என்ற எண்ணம் வாசகர் மத்தியில் உண்டு. அதை இப்பதிப்பின் மூலம் நற்றிணை பதிப்பகம் சாத்தியமாக்கியிருக்கிறது.
- ஜெயமோகன்
.
Be the first to rate this book.