வைரஸ்கள் நம்முடன்தான் இருக்கின்றன. அதைவிட்டுத் தூரமாக நம்மால் விலகி ஒடவெல்லாம் முடியாது. அதனைப் பார்த்து பயந்து ஓட வேண்டிய அவசியமும் இல்லை. அது நம்முடனேயே இருக்கும் ஒரு சாதாரணமான விஷயம்தான் என்பதை நூலின் ஆரம்பத்திலேயே எந்தவொரு படபடப்பும் இல்லாமல் இயல்பாகச் சொல்லிவிடுகிறார். சிக்கலான அறிவியல் நூல்களைப் படிப்பது போலில்லாமல் நமக்குப் பிடித்த நாவலைப் படிக்கும்போது சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை அறியாமல் மெய் மறந்து படிக்கும் அனுபவத்தைத் தருகிறது ஒரு அறிவியல் நூலை மாணவர்கள் வாசிக்க வேண்டுமெனில் அது இவ்வாறு இருப்பது மிகவும் அவசியம் மாணவர்கள் பாடப் புத்தகம் தாண்டி தங்களின் தேடலை விசாலப் படுத்திக்கொள்ள இதுபோன்ற நூல்கள் அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.
-Dr. C. நித்யா
Be the first to rate this book.