பிரமிளா பிரதீபன் இலங்கைத் தலைநகர் கொழும்பு அருகேயுள்ள வத்தளை நகரத்தில் வசிக்கும் இவர், ஊவா மாகாணத்தின் பதுளையைச் சேர்ந்தவர். இவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். மேலும் வருகைத்தரு விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகிறார்.
ஏற்கனவே தன் ஊரில் மூன்று புத்தகங்கள் - கட்டுபொல் (நாவல்) 2 சிறுகதைத் தொகுதிகள் (பீலிக்கரை, பாக்குப்பட்டை) வெளியாகியுள்ளது.
யதார்த்த வாழ்வில் பல்வேறு கதாபாத்திரங்களுக்குள் உழன்று திரியும் என்னை, மிதக்கும் அந்த உணர்வுலகத்தில் செலுத்த முனையும் பொழுதிலேயே, ஒன்றில் இலக்கியம் படிக்க அல்லது படைக்க எனக்கும் முடியுமாயிருந்தது. என்றாலும் இது மிக அரிதாகவே நடைபெற்றது. அல்லது நடைபெறுகிறது.
அந்த மாயவெளிகளினூடேநான் மீட்டெடுத்ததும் என்னை நெருடிக் கொண்டிருப்பதுமான ஒருசில காட்சிகளையே நான் சிறுகதையாக்க முயற்சித்திருப்பதாய் பின்னாளில் என்னால் உணர முடிந்தது. கூடவே அக்கதைகளிலெல்லாம் ஏதோ ஒரு வடிவத்தில் நான் உள்நுழைந்திருந்தமை பற்றிய உவந்திடலும் எனக்குச் சாத்தியமாகவே இருந்தது. முன்வைக்கும் மையப்பாத்திரங்களின் எண்ணங்களையும் விவாதங்களையும் முடிவுகளையும் வாசிப்பவர்களிடம் கடத்தி ஏற்கச் செய்யும் உத்தியாக அதனைக் கையாண்டுள்ளார்.
வடிவச் செழுமையும் மொழிப்பயன்பாடும் கைபிடித்துக் காட்டும் காட்சிச் சித்திரங்களும் கொண்ட பிரமிளாவின் கதைகள் வாசிப்புத் திளைப்பைத் தரும் வல்லமையுடைய கதைகள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமானவை. வடிவ ரீதியாகவும் பேசுபொருள் நிலையிலும் முந்திய கதைகளை நினைவூட்டாத கதைகள். ஜில் பிராட்லி, நீலி போன்ற கதைகள் புதிய சோதனைகளை முயற்சித்துள்ள கதைகள். ஆனால் எழுதுபவரின் வாழ்க்கைப் பார்வை குறித்த ஓர்மை கொண்ட கதைகள். அவரது கதைகளின் மையப்பாத்திரங்கள் பெரும்பாலும் பெண்களே. குறிப்பான சூழலில் தன்னை நிறுத்திக்கொண்டு அச்சூழல் தரும் நெருக்கடியிலிருந்து தங்களை மீட்டுக்கொள்ளும் பெண்களை – உடல் வலிமையை விடவும் புத்திக்கூர்மையைப் பயன்படுத்தும் பெண்களைக் கதைக்குள் உயிர்ப்பித்துக் காட்டியுள்ளார். இந்த முன்வைப்புகளெல்லாம் எந்தெந்தக் கதையில் வெளிப்பட்டுள்ளன என்று எடுத்துக்காட்டி விளக்கப் போவதில்லை அதனை வாசகர்களுக்கே விட்டுவிடுகிறேன்.
- பேரா.அ.ராமசாமி
Be the first to rate this book.