குமரிப் பதிப்பகம் ஒரு பதிப்பு வெளியிட்டது.. ஒரு பெண்ணின் மார்பில் அம்பைச் செலுத்திவிட்டு ஜெயிலுக்குப் போனவன். விடுதலையாகி மதுரையில் ஒரு கோடவுனில் வேலை செய்கிறான். ஒருசமயம் மதுரையைச் சுற்றிப் பார்க்க வரும் முதலாளியின் அழகிய மனைவி மந்தாகினிக்குத் துணையாக அவன் செல்ல நேர்கிறது. அன்றைய இரவு இருவருக்கும் இடையேயான நெருக்கத்தில் ராதா மந்தாகினியின் மேல் பைத்தியமாகிறான். மந்தாகினி விடைபெற்றுச் செல்லும்போது ராதாவின் நினைவாக அவனது அம்பைப் பெற்றுச் செல்கிறாள். அதன் பின் அவள் சென்னையில் இறந்துபோகிறாள். அவள் மார்பில் ரத்தப் பிரவாகமாக செருகிக் கிடப்பது ராதாவின் அம்பு. மந்தாகினி கொலை செய்யப்பட்டாளா அல்லது மிகத் தீவிரமாக மரணத்தை நேசித்தவள் தற்கொலை செய்து கொண்டாளா? இக்கதையின் முடிவை 'ஆம்' 'இல்லை' என்ற வார்த்தைகளில் வாசகர்களிடமே விட்டு விடுகிறார் சுஜாதா. இந்த 'விரும்பிச் சொன்ன பொய்கள்' குங்குமச் சிமிழ் நாவலாக 1987ல் வெளியானது.
Be the first to rate this book.