வாகன விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட ஒருவரது உடலைப் பல உறுப்புகள் செயலிழந்த நிலையில் கிடக்கும் செதெரீக்கின் தலையுடன் இணைக்கும் உறுப்புமாற்று அறுவைச்சிகிச்சை வெற்றி பெறுகிறது. செதெரீக்கின் தந்தை பெரும் செல்வந்தராகையால் இது சாத்தியமானது. இந்த அறிவியல் புரட்சியின் தலைமகன் செதெரீக் உடல் உபாதைகள், உளவியல் சிக்கல்கள் எனப் பல சவால்களை ஏற்கவேண்டிய இக்கட்டுக்கு ஆளாகிறான். இயற்கையின் முடிவினை எதிர்க்கவும் தவிர்க்கவும் துணியும் இந்த அறிவியல் முயற்சியின் முடிவு என்ன என்பதைப் பல மர்ம முடிச்சுகளோடு சுவாரசியமாக விவரிக்கிறார் இப்புதின ஆசிரியர் உய்பெர் அதாத்.
இக்கதையின் கற்பனை நிறைவேறும் நாள் முதல் நமக்கு நெருக்கமான சொந்தங்கள், நண்பர்கள், சான்றோர்கள், தலைவர்கள், பிரபலங்கள் என எல்லாரும் ஏதோ ஒரு வடிவில் நீண்டகாலம் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பார்கள். எதிர்கால உலகின் அளப்பரிய அறிவியல் ஆற்றலால் விளையவிருக்கும் விபரீதங்களை விவாதிக்கத்தூண்டும் புனைவு இது.
Be the first to rate this book.