பெரும் வெடிப்பாகவும் தீவிரமாகவும் வெளிவந்திருக்கும் இந்த நூல் அனுபவம், கோட்பாடு, அறம், அரசியல் குறித்து இந்தியாவைச் சேர்ந்த தத்துவவியலாளருக்கும் சமூகக் கோட்பாட்டாளருக்கும் இடையே நடக்கும் உரையாடலாகிறது. இந்த நூல் கொண்டிருக்கும் வேறு பல சிறப்புகளை மீறி, தீண்டாமையின் ஏரணம் குறித்து – இதன் ஊடாக, சாதியம் குறித்தான இந்தியச் சிந்தனை மற்றும் அனுபவம் குறித்தும் மிகவும் குறிப்பிடத்தக்கப் பிரதிபலிப்பைக் கொண்டிருக்கிறது.
- அர்ஜுன் அப்பாதுரை
இந்தியாவின் இரண்டு முக்கியமான சிந்தனையாளர்களுக்கு இடையேயான – ஒருவர் தத்துவவியலாளர், மற்றொருவர் அரசியல் அறிவியலாளர் – உரையாடல்களின் விளைவாக வந்திருக்கும் விரிசல் கண்ணாடி சர்வதேச முக்கியத்துவம் கொண்ட ஒரு அறிவார்த்த நிகழ்வாகிறது. சமூகக் கோட்பாட்டுக்குள் வாழ்வனுபவத்தைக் கொண்டுவருவதாக மட்டும் இல்லாமல், பல நூற்றாண்டுகளாக உள்ளிணைத்துக்கொள்ள முடியாத தலித்துகளின் அனுபவங்களெல்லாம் மேலாதிக்கம் செலுத்துபவர்களின் பிரக்ஞையில் திரிந்து காணப்படுவதையும் மிகத் திடமாகக் கொண்டுவருகிறது. இது, ‘தெற்கிலிருந்து வந்திருக்கும் உண்மையான கோட்பாடு’. இந்த நூல் எல்லா இடங்களிலும் படிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.
– ஷெல்டன் போலாக்
Be the first to rate this book.