இருப்பின் மீதான கேள்விகள் மனிதனுக்குள் எப்போதும் புகையைப் போல எழுந்து கொண்டேயிருக்கின்றன. அப்புகையினூடாக எழுகிறவற்றில் சித்திரத்தைக் காண முயல்கிற வழிவகைகளுள் ஒன்றாகவே கவிதை இருக்கிறது. அன்றாட வாழ்வில் சந்திக்கிற அனுபங்கள், மனதுக்குள் ஊடுருவும் அந்நிகழ்வுகளின் பொருட்டு எழுகிற கேள்விகள் இவற்றையே கவிதையாக்கி இருக்கிறார் ஷான். நவீனத்துவத்தை அடியொற்றி அதன் போக்கில் சமகால வாழ்வின் பின்புலங்களை விசாரிக்கிற இக்கவிதைகள் இயலாமைக்கு இரையாகி, அதன் பொருட்டு குற்றவுணர்வு கொள்கிற மனங்களைப் பிரதிபலித்துப் பேசுகிறது. மனிதனுக்குள்ளிருக்கும் அக வன்முறையையும், நவீன வாழ்க்கை முறையின் அபத்தங்களையும் முன்மொழிகிற கவிதைகள் இவை.
- பொன். வாசுதேவன்
Be the first to rate this book.