மினுக் மினுக் என்று மின்னும் கோடானுகோடி நட்சித்திரங்கள். பாட்டி வடை சுட்ட அதே நிலா,மிதக்கும் செயற்கைக் கோள்கள் விண்வெளி அற்புதங்கள் அனைத்தையும் அருகில் சென்று பார்க்க ஒரு சுவாரஸ்யமான அறிவியல் டூர் கெய்ட். வானத்தைப் பார்த்து நீங்களும் உங்கள் குழந்தைகளும் எழுப்பக் கூடிய கேள்விகள் அனைத்துக்கும் இதில் விடை உண்டு. உங்கள் முதுகில் இரண்டு இறக்கைகளைச் செருகி, விண்வெளிக்கு அழைத்துச் செல்லப் போகிறது இந்நூல்.
அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வங்கக்கடலில் புயல் அபாயம் உள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப் படுகிறார்கள்.
சிறகுகளை விரித்தபடி வானத்தில் மிதந்துகொண்டு இருக்கும் தேவதைகளால் அருளப்படும் அறிவிப்புகள் இவை. அறிவியலும் தொழில்நுட்பமும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய அந்த தேவதையின் பெயர் செயற்கைச்கோள்.
முழுக்க முழுக்க அதிசயங்கள் மட்டுமே நிறைந்த தனி உலகம் விண்வெளி. பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., என்று நாம் செலுத்தும் ராக்கெட்டுகள் எங்கே போகின்றன? என்ன செய்கின்றன? செயற்கைக் கோள்கள் எப்படி இயங்குகின்றன? எப்படிச் செய்திகளை அனுப்புகின்றன? விண்வெளியில் என்னென்ன இருக்கும்?
வானத்தைப் பார்த்து நீங்களும் உங்கள் குழந்தைகளும் எழுப்பக் கூடிய கேள்விகள் அனைத்தும் இதில் விடை உண்டு.
உங்கள் முதுகில் இரண்டு இறக்கைகளைச் சொருகி, விண்வெளிக்கு அழைத்துச் செல்லப் போகிறது இந்நூல்.
வானத்தில் ஜிவ்வென்று பறக்கும் அனுபவத்தை ஏற்படுத்தும் நேர்த்தியான அறிவியல் ட்ரீட் இந்நூல்! நூலாசிரியர் ராமதுரை தமிழக அரசின் விருது பெற்றவர். முப்பதாண்டுகால அனுபவம் பெற்ற அறிவியல் எழுத்தாளர்.
Be the first to rate this book.