உண்ணும் உணவு முறையாலும் உணவுப் பொருள்களாலும் பசியை மட்டுமின்றி, வந்த பிணியை விரட்டியும், நோய் வராமல் காத்தும் கொண்ட பக்குவத்தை அறிந்திருந்தது நம் தமிழ்ப் பாரம்பர்யம். காய்கறிகளிலும் கீரைகளிலும் விதைகளிலும் மருத்துவக் குணங்கள் இருப்பதை நன்கு அறிந்துவைத்து, உணவாக உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர் நம் முன்னோர். உணவே மருந்து என்ற நிலை மாறி, உணவே விஷமாகும் விபரீத சூழ்நிலையில்தான் இன்றைய தலைமுறை உள்ளது. இதனால், தமிழர்களின் ஆதி மருத்துவ முறையான சித்த மருத்துவத்திற்கு, இளம் தலைமுறையைத் திருப்பவேண்டியது அவசியம்.
அசுத்தமான தண்ணீரைச் சுத்தப்படுத்தி அதைப் பருகும் நிலைக்குப் பக்குவப்படுத்தும் தேற்றான் கொட்டை முதல் காய்கள், அதன் விதைகள், கொட்டைகளில் உள்ள மருத்துவக் குணங்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு மருந்தாகப் பயன்படுத்துவது பற்றியும் விளக்குகிறது இந்த நூல். மூளையையும் இதயத்தையும் பலப்படுத்தி நினைவாற்றலைப் பெருக்கும் கடுக்காய், மண்ணீரல், கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகும் சுண்டைக்காய்.
இப்படி இயல்பாய்க் கிடைக்கும் காய்கள், விதைகள், கொட்டைகளிலிருந்து நம் வீடுகளிலேயே எளிய முறையில் மருந்துகள் தயாரித்து பயன்பெற வழிசொல்லும் நூலிது. காய், விதை, கொட்டைகளின் மருத்துவக் குணங்களை அறிந்துகொண்டு ஆரோக்கியம் பெறுங்கள்!
Be the first to rate this book.