'நிகழ்த்துக் கலையாக இருந்த ஒரு வடிவம் எழுத்துக் கலைக்குள் நுழையும்போது எதை இழக்கிறது? எதைப் பெறுகிறது? ஆதியின் கதைசொல்லிகள் எங்கே மறைந்து போனார்கள்?
எளிய மனிதர்களின் ஏக்கங்கள்... எதிர்வினைகள்... கலைஞர்களின் பிறழ்வுகள்... கலையாடிகளின் தடுமாற்றம்... ஒரே திணைக்குள் வேறுபடும் உரிப்பொருட்கள்... மொழிப்போரின் வட்டார வரலாறு... புராணிய மறுவாசிப்பு... சாவுணர்ச்சிக்குள் சென்றும், மீண்டும் திரும்பிவரும் தானட்டோஸ்...இவற்றோடு,இவர்களோடு...வேன்ஹாவும், மொஸார்டும் தங்கள் ஆன்மாவைக் கலந்திருக்கிறார்கள்... கதைகளாக..கதைசொல்லிகளாக...
Be the first to rate this book.