இந்தியாவிலும் உலக அரங்கிலும் புதுத் தமிழ் இலக்கியத்தின் மேன்மையே தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டு ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக எழுத்தாளராகவே இருந்துவரும் க.நா.சுப்பிமண்யம் தமிழ் நாவல், சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, இலக்கியப் பத்திரிகை வெளியீடு ஆகிய துறைகளில் மைல் கல்கள் பதித்திருக்கிறார். தற்காலத் தமிழ் எழுத்தில் அதனைப் புரிந்திருக்கும் அனைத்து எழுத்தாளர்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ க.நா.சுவின் விமரிசனக் கண்ணோட்டத்திற்கும் முன் மாதிரிகளுக்கும் கடமைப்பட்டிருக்கிறார்கள். எழுபத்தி மூன்றாவது வயதிலும் அயராது உழைக்க வேண்டியுள்ள இவரது ‘விமரிசனக்கலை’ ஒவ்வொரு தமிழ் வாசகரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூல்.
-அசோகமித்திரன்
Be the first to rate this book.