1980லிருந்து 1994வரை எழுதப்பட்ட சிறுகதைகள், நெடுங்கதைகள், குறுநாவல்கள் அனைத்தும் அடங்கிய தொகுப்பு. 30 கதைகளில் கனகச்சிதமான யதார்த்த சிறுகதைகள், வடிவம் பற்றிய கவலையே இல்லாத கதைகள், நவீன கதைகள், மாய யதார்த்தக் கதைகள், நெடுங்கதைகள், குறுநாவல்கள் என்ற பலவகைக் கதைகள் உள்ளன. 14 வருடங்களுக்குள் எழுதப்பட்டிருக்கும் இவற்றில் ஒன்றுக்கொன்று சாயல்கூட இல்லாத, அந்தந்த கதைக்கு ஏற்ற மொழி கையாளப்பட்டிருப்பது படிப்பவர்கள் கவனத்தில் படக்கூடும். 1994ல் ஆறே மாதங்களில் எழுதப்பட்ட கதைகளுக்குள்ளாகவே கூட இதைப் பார்க்க முடியும். ஒரே கதையில் கூட வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு மொழிநடையில் எவ்வித மெனக்கெடலும் இல்லாமல் எழுதப்பட்டிருப்பதை எந்தத் தீவிர வாசகனாலும் உணர முடியும்.
Be the first to rate this book.