வில்லிபாரதம் வில்லிபுத்தூரார் தமிழில் பாடிய மகாபாரதம் ஆகும். வைணவ புலவரான வில்லிபுத்தூரார் சனியூர் என்ற ஊரில் பிறந்தவர். வக்கபாகை என்னுமிடத்தை ஆண்டுவந்த மன்னனான வரபதி ஆட்கொண்டான் என்பவன் வில்லிபுத்தூராரை ஆதரித்து வந்தான்.ஒருமுறை வில்லிபுத்தூரார் புலவர்களிடம் போட்டி வைத்து யார் தோல்வி அடைகிறார்களோ அவர்களின் காதுகளை வென்றவர் அறுக்க வேண்டும் என்று கூறினார். இப்படியாக பல பேருடைய காதுகளை போட்டியில் வென்று அறுத்தார் வில்லிபுத்தூரார். ஒருமுறை அவ்வூருக்கு வந்த முருக பக்தரான அருணகிரிநாதர் இந்த செயலை தடுக்க வேண்டும் என்று போட்டியில் கலந்து கொண்டார். அருணகிரியார் பாடிய ஒரு பாடலுக்கு பதில் கூற முடியாமல் வில்லிபுத்தூரார் தோற்றார். மேலும் அருணகிரியார் வில்லிபுத்தூராரை மன்னித்து இனி இது போன்ற போட்டியை வைப்பதாக கூறி தன் பாவத்தை தீர்க்க மகாபாரதத்தை தமிழில் எழுதினார். அதுவே வில்லிபாரதம் என்று அழைக்கபடுகிறது.
Be the first to rate this book.