புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள் வாழ்வின் சம்பவங்களோடு, பின்னிப்பிணைந்த பிரச்னைகளை, அவற்றை எதிர்கொள்ளலை நாம் அங்கீகரித்து உள்வாங்கிக்கொள்கிற விதத்தில் இந்தக் கதைகள் மிளிர்கின்றன. அதுவே இந்தக் கதைகளோடு நம்மை நெருக்கமாக்குகிறது. இந்தப் புனைவுகளின் கதையாடலில் மறைந்திருக்கும், நேரடியான அர்த்தங்களைவிட அதன் நீட்சியாக நம்மைக் கவர்ந்திழுக்கும் அர்த்தப்பாடுகளே இந்தக் கதைகளின் மேன்மையையும், காலம் தாண்டியும் பேசப்படுவதற்கான நிலைத்த தன்மையையும் சாத்தியப்படுத்திக் கொள்கின்றன. இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் வேறெந்த அச்சிதழிலும், இணையத்திலும் வெளியாகதவை. சமகால எழுத்தின் போக்குகளை, புதிய, இளம் தமிழ்ப் படைப்பாளிகளின் எழுத்துக்களின் வாயிலாக அடையாளங்காண இந்தத் தொகுப்பு உதவும்.
Be the first to rate this book.