இந்தக் கதை கி.பி 640 வாக்கில் அதாவது கிட்டத்தட்ட 1374 வருடங்களுக்கு முன்பு நடந்த சரித்திரச் சம்பவங்களை ஆதாரமாகக் கொண்டது. பாண்டியர்கள் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த காலம். பாண்டிய நாட்டில் எல்லை தெற்கே கன்யாகுமரிவரையும் வடக்கே உறையூர் வரையும் பரவியிருந்தது. அப்பொழுது ஆயர்கள் எனப்படும் அரசர்கள் சேரநாட்டின் தென்பகுதியை ஆண்டு வந்தனர். பாண்டிய நாட்டில் சைவமும் வைணவமும் தளைத்து இருந்தாலும், சமணமும் புத்தமும் முளைவிட முயற்சி செய்து கொண்டிருந்தது. சமணர்கள் எப்படியாவது தங்களது சமயத்தைப் பாண்டிய நாட்டில் பரப்பிவிடப் பல முயற்சிகள் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களின் முக்கிய எண்ணம் பாண்டிய நாட்டை ஆளும் அரசரை மனம் மாறச் செய்தால் நாட்டின் குடிகளும் மாறிவிடுவார்கள் என்பதாக இருந்தது. அதற்கு சமணர்கள் பலவிதத்திலும் முயற்சி செய்தார்கள். இந்தக் கதையில் அதற்கான ஒரு முயற்சியைச் சொல்லியிருக்கிறேன். நான் சொன்ன சமணர்களின் முயற்சிக்கு எந்த விதமான சரித்திர ஆதாரமும் இல்லை.
Be the first to rate this book.