ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய விலங்குப் பண்ணை, அதிகாரம், ஊழல் மற்றும் கிளர்ச்சி ஆகியவற்றை ஆராயும் ஓர் உருவக நாவல், விலங்குப் பண்ணையில் நடக்கும் ஒடுக்கு முறைக்கு எதிராக அப்பண்ணையின் விலங்குகள் யாவும் ஒன்று சேர்ந்து புரட்சியில் ஈடுபடுகின்றன. இறுதியில் முதலாளித்துவத்தின் கோரப் பிடியில் சிக்கிப் போராடித் தோற்கின்றன. இதை அங்கதச் சுவையோடு எழுதி இருக்கிறார் நாவலாசிரியர்.
ரஷ்யப் புரட்சியையும் அதன் விளைவுகளையும் பகடி செய்யும் நோக்கில் எழுதப்பட்ட இந்த நாவல், உலகம் முழுதும் பரவலாகக் கவனம் பெற்றது. அதே சமயம் பல நாடுகளில் தடையும் செய்யப்பட்டது. கட்டுப்பாடற்ற அதிகாரத்தின் அபாயங்கள் பற்றி எச்சரிக்கும் நாவலாக இந்தப் புனைவு இன்றும் பொருத்தமாக உள்ளது.
எழுத்தாளர் பி.வி.ராமஸ்வாமி, தனது கச்சிதமான மொழிபெயர்ப்பின் மூலம், மூல நாவலின் செறிவையும் சுவையையும் அப்படியே தமிழில் கொண்டு வந்திருக்கிறார்.
Be the first to rate this book.