புதியற்றின் மீதான விருப்பம் மனிதர்களை கதைகளைத் தேடச் சொல்கிறது. ஒருவருக்குள் மறைந்திருக்கும் வெகுளித்தனம் நல்ல கதைகளை எழுதச் செய்கிறது. காடோ மெல்லிய உணர்வுகளை மேலோங்கச் செய்கிறது. வெகுளித்தனமான மருத்துவரும், காடும், விலங்குகளும், இலைகளும் நிறைந்திருக்கும் இந்தக் கதை பல வருடங்களுக்குமுன் மலையாளத்தில் வெளியானது. சிரிக்க வைத்தபடியும், ஓவியங்களோடு நம்மை பிணைத்தபடியும் நகர்ந்து செல்லும் வேடிக்கையான இந்தக் கதை முழுவதும் காட்டிலேயே நடக்கிறது. காட்டில் நிறைய உயிரினங்களை சந்தித்து உரையாடும் மருத்துவர் இறுதியாக இயற்கையை இயற்கையிடமே விட்டுவிட்டு கடந்து செல்லும் இயல்பால் இது எல்லோருக்குமான ஒரு கதையாகிறது.
Be the first to rate this book.