விளம்பரப் படம் என்பது குறைந்த நேரத்தில் படைக்கப்படும் ஒரு முழுத் திரைப்படம். அது, அரிசியில் தாஜ்மஹாலை செதுக்குவதற்குச் சமம்.
இந்த வார்த்தைகள் விளம்பரப்பட உலகைப் பற்றிய ஒரு முழுமையான தெளிவை நமக்கு உருவாக்கிவிடுகிறது. இந்தியாவின் தலைச்சிறந்த விளம்பரப்பட இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி இருவரும் தங்களின் விளம்பரப்பட உலகம் குறித்த சுவாரஷ்யமான தகவல்களையும், ஒவ்வொரு விளம்பரப் படத்தையும் எடுக்க எவ்வாறு திட்டமிடுகிறோம் என்ற அவர்களின் தொழில் இரகசியத்தையும் படைப்பாக நமக்கு அளித்துள்ளனர்.
இந்நூலில் ஒரு சிறு வசதி செய்துள்ளோம். ஒவ்வொரு கட்டுரையைப் படித்ததும், அந்த கட்டுரையில் சொல்லப்படும் விளம்பரத்தை பார்ப்பதற்கான Scan and View லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. வாசகர்களுக்கு ஒரு வகுப்பறையில் படம் பார்ப்பதுபோல அனுபவம் இது.
Be the first to rate this book.