பொருளாதாரப் போக்குகளிடம் நம்மை முழுமையாய் ஒப்படைத்துக்கொண்ட நூற்றாண்டில் வாழ்கிறோம். உலகப் பொருளாதார நிலைமைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு வடிவங்களில் ஒரே வகையான தாக்குதலைத்தான் தொடுக்கின்றன. அவற்றை அறிந்து பாடம் கற்றுக்கொள்வதே நம்மைத் தற்காத்துக்கொள்வதாகும். நம்முன்னே நிகழ்ந்தவற்றைப் பாடமாக்கி அந்தத் தற்காப்புக்கு உதவும் பொருளாதார அடிப்படைகளை இக்கட்டுரைகள் இயம்புகின்றன. நூலின் பலதிறச் சுவைக்காக நகையுணர்வு மிக்க கட்டுரைகளும் இடம்பெற்றிருப்பது சிறப்பு. பொருளாதாரம் பயணம் நகைச்சுவை பல்சுவைத்தமிழ் என மனத்தைக் கொள்ளையிடும் எழுத்துகளின் தொகைநூல் இது.
Be the first to rate this book.