இந்தியாவின் அறிவியல் வளங்களில் ஒன்று விக்ரம் சாராபாய். குஜராத் கொடுத்த இன்னொரு கொடை.
1957ல் ரஷ்யா முதல் செயற்கைக்கோளை ஏவியபோது உடனே இந்தியாவும் ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் என்று அறிவித்தார் விக்ரம் சாராபாய். சொன்னபடியே செய்தும் காட்டினார். சாட்டிலைட் இல்லாத வாழ்க்கையை நம்மால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதபடி இத்துறையில் இந்தியா அசாதாரண வளர்ச்சி அடைந்ததற்குக் காரணம் அவர்தான்.
அணுசக்தி அறிவியலின் தந்தையான ஹோமிபாபாவின் மறைவுக்குப் பிறகு அணு ஆராய்ச்சிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அணு ஆயுதத்தைக் காட்டிலும், அணு மின்சாரம்தான் முக்கியம் என்று புதிய வளர்ச்சிப் பாதையை வகுத்தார் அவர்.
ஓர் அசாதாரணமான வாழ்க்கை.
Be the first to rate this book.