தெய்வத்திடம் நம்பிக்கையையும், சக மனிதர்களிடம் நேசத்தையும், தன்னில் வீர உணர்ச்சியையும் விளைவிக்குமாறு எழுந்ததே விக்கிரமாதித்தன் கதைகள் போன்ற பழங்கால கதைகள்.
மன்னன் விக்கிரமாதித்தன் வீரத்திற்கும் பெருந்தன்மைக்கும் உதாரண புருஷனாக விளங்குகிறான்; அமைச்சன் பட்டியோ மனித பலத்தையும், பலவீனத்தையும் நுணுகி அறியும் மதியூகியாக இருக்கிறான். இவர்கள் மூலம் சமூக அறிவு பெற முடிகிறது. மனித உறவின் பல்வேறு நிலைகளை (நிலையாமைகளையும்) புரிந்து கொள்ள முடிகிறது.
வாழ்வியல் தத்துவங்களை சுவையான சம்பவங்களில் கோர்த்து, சுவாரஸ்யமாக படிக்கும் வகையில் சொல்லப் பட்டிருக்கிறது.
Be the first to rate this book.