‘எல்லாக் குலத்தோரும் பூசாரிகளாக வேண்டும்’ எனும் சமூக மாற்றத்தை அரசியல் முன்னெடுத்து நீண்ட காலமாகி விட்டது. வழிபாட்டின் எல்லாப் பரிமாணங்களையும் பதிவு செய்யும் விக்கிரகம் நாவல் சாதிகளைத் தாண்டி வழிபாடு செய்விக்கும் தொழிலையும் வழிபாட்டின் மையமான நம்பிக்கையையும் அதைச் சுற்றிய அரசியலையும் பதிவு செய்கிறது. தமிழில் நம்பிக்கை, வழிபாடு பற்றிய முக்கியமான படைப்பான இந்த நாவல் எழுப்பும் கேள்விகள் சமகாலச் சூழலில் இன்றும் புதிர்களாய் நிற்பது ஏன்? இந்தப் புள்ளியில் நாவலை உள்வாங்கி மேற்செல்லும்போது மேலும் பலப்பல கேள்விகள் முளைக்கின்றன.
சத்யானந்தன்: பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சதங்கை, கணையாழி, நவீன விருட்சம், சங்கு, உயிர்மை, மணிமுத்தாறு, புதியகோடாங்கி, இலக்கியச் சிறகு, கனவு உள்ளிட்ட சிறு பத்திரிகைகளிலும், திண்ணை, சொல்வனம் உள்ளிட்ட இணையதளங்களிலும் தீவிரமாகத் தனது படைப்புகளைப் பிரசுரித்துள்ளார் கவிஞர், எழுத்தாளர் சத்யானந்தன். நவீன புனைகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகளை வித்தியாசமாகப் படைப்பவர்.
Be the first to rate this book.