ஆண்டுதோறும் வெளியிடப்படும் விகடன் இயர் புக் போட்டித் தேர்வு எழுதுவோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது வாசிப்பில் ஆர்வம்கொண்ட வாசகர்கள், தங்கள் குழந்தைகளின் பொது அறிவை வளர்க்க விரும்பும் தாய்மார்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்படுகிறது. 2013-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டுவரும் ‘விகடன் இயர் புக்’ அரிய தகவல் களஞ்சியமாக விளங்குகிறது என்பது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், எழுத்தாளர்கள், பொது அறிவு ஆர்வலர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்களின் கருத்து. அந்த வரிசையில், இந்த ஆண்டும் அறிவை மெருகூட்டும் அனைத்துத் தகவல்களின் தொகுப்பாக தரமுடன் விகடன் இயர் புக்-2021 தயாரிக்கப்பட்டுள்ளது. 2020-ல் நூற்றாண்டு கண்ட ஆளுமைகளான சுரதா, மருதகாசி, ஜெமினி கணேசன், கு.மா.பாலசுப்ரமணியம், தி.ஜானகிராமன் ஆகியோர் குறித்த சிறப்புக் கட்டுரைகள், இந்தியச் சட்டங்கள்-2020, நோபல் பரிசுகள்-2020 குறித்த விளக்கமான கட்டுரைகள், உலகம், இந்தியா, தமிழக நடப்பு நிகழ்வுகள், அமெரிக்க அதிபர் தேர்தல், லெபனான் வெடிவிபத்து, சங்கச் சுரங்கம், வள்ளுவத்தில் நடையழகு, இணையத் தமிழுக்கு வயது-25, இந்திய பாதுகாப்பு அதிகாரி பதவி, இந்தியா பட்ஜெட்-2020, எங்கேயும் எப்போதும் எஸ்.பி.பி., இந்திய-தமிழக முத்திரை முகங்கள், முத்திரைச் செய்திகள்... என அரிய செய்திகளின் தகவல் பெட்டகமாகத் திகழ்கிறது. மேலும், இந்திய விளையாட்டு ரத்தினங்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பற்றிய ஆய்வுக் கட்டுரை, யு.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை, யு.பி.எஸ்.சி தேர்வு வினா-விடை, யு.பி.எஸ்.சி தேர்வு நான்காம் தாளுக்கு நச்சென்று நான்கு செய்திகள், யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி வெற்றியாளர்களின் அனுபவப் பகிர்வு... இப்படி போட்டித் தேர்வர்களுக்குத் துணைபுரியும் அனைத்துத் தகவல்களும் இதில் அணிவகுத்துள்ளன. மொத்தத்தில் உங்கள் அறிவுத் தேடலுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம் இது! படித்தறிந்து உங்கள் அறிவுப் பார்வையை விசாலமாக்குங்கள். இயர் புக் பற்றிய உங்கள் கருத்துகளை ‘books@vikatan.com’ என்ற மின்னஞ்சலில் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Be the first to rate this book.