தமிழ் இலக்கிய வாசகர்கள் மத்தியில் 'விகடன் தடம்' இதழ் தனித்த இடம் பெற்றது. விகடன் தடம் சார்பில் நடத்திய நேர்காணல்கள் வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. தமிழ் இலக்கிய வாசக உலகில் முன்னணி எழுத்தாளர்களாத் திகழ்ந்த, திகழ்பவர்களிடம் பிரத்யேகமாக நேர்காணல்கள் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி, எட்டப்பட வேண்டிய உயரம், உலகளவில் தமிழ் இலக்கியம் ஏற்படுத்திய தாக்கம் என அனைத்தையும் இந்த நேர்காணல்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். அப்படிப்பட்ட நேர்காணல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கிய ஆளுமைகளான, பிரபஞ்சன், தொ.பரமசிவன், ஜெயமோகன். கி.ராஜநாராயணன்., எஸ்.ராமகிருஷ்ணன், அ.மார்க்ஸ், அசோகமித்திரன், பால் சக்காரியா, பெருமாள் முருகன், அ.முத்துலிங்கம், விக்ரமாதித்யன், சாருநிவேதிதா, வைரமுத்து, சு.வெங்கடேசன், மனுஷ்ய புத்திரன், இமையம், ஷோபா சக்தி, கண்மணி குணசேகரன், ஆ.சிவசுப்பிரமணியன், மு.ராமசாமி, மருது, குட்டி ரேவதி, இந்திரா பார்த்தசாரதி, ஜி.நக்கீரன், ஆ.இரா.வேங்கடாசலபதி ஆகியோரின் நேர்காணல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. விகடன் தடம் வழியே தமிழ் இலக்கியத்தின் பயணத்தையும் உயரத்தையும் இனி காணலாம்.
Be the first to rate this book.