‘விகடன் இயர் புக்’ என்பது ஒவ்வோர் ஆண்டுக்கான தகவல் களஞ்சியம் மட்டும் அல்ல, பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய அறிவுக் கருவூலமும் ஆகும். 2013-ம் ஆண்டு முதல் ‘விகடன் இயர் புக்’ வெளியிடப்பட்டு வருகிறது. தமிழக மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அத்தியாவசியமான ஒரு புத்தகமாகத் திகழும் விகடன் இயர் புக், ஆண்டுதோறும் மேன்மேலும் பரிணாமம் பெற்று வருகிறது. தொடர்ச்சியாக ஐந்தாம் ஆண்டு அறிவுலகத்தின் திறவுகோலாக விகடன் இயர்புக் வெளியிடப்பட்டிருக்கிறது.
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா, கீழடி அகழாய்வு, தமிழ் எழுத்துரு பற்றிய ஆய்வுக் கட்டுரை கல் முதல் கணினி வரை, எம்.ஜி.ஆர். என்சைக்ளோபீடியா, இந்திரா இதிகாசம், ஜெயா கிராஃபி, மத்திய - மாநில அரசுகளின் புதிய திட்டங்கள், கொள்கைகள், முத்திரை முகங்கள், முத்திரைச் செய்திகள் என அனைத்தும் கொண்ட தகவல் களஞ்சியமாக அமைந்துள்ளது. இவற்றோடு, ஐ.ஏ.எஸ். தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்டும் ‘தப்பான கற்பிதங்களில் இருந்து தப்பிப்போம்’ என்ற கட்டுரை, டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான பொது ஆங்கிலம், சர்வதேச அளவிலான விருதுகள், இந்திய, தமிழக விருது விவரங்கள், 2016 நோபல் பரிசுகள், ஐந்து நூல்கள் பற்றிய அலசல், 2016-ல் வெளியான புதிய புத்தகங்கள், இந்திய வரலாறு - தகவல் தொகுப்பு, உடற்செயலியல் தகவல் தொகுப்பு, தொல்காப்பியத் துளிகள், மின் ஆளுகை, அன்றாட வாழ்வில் நுண்ணுயிரிகள் பங்கு... என இதில் இல்லாதது எதுவுமில்லை என வியக்கும் வகையில் அரிய பெரிய தகவல்களைத் தன்னகத்தே தாங்கி வெளிவந்திருக்கிறது இந்த இயர்புக்!
மேலும், போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் வகையில் விகடன் வழிகாட்டல் நிகழ்ச்சியின் விவரங்களும், வெற்றியாளர்கள் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. போட்டித் தேர்வு வினா விடை களஞ்சியமும் இலவச இணைப்பாகத் தரப்பட்டுள்ளது. எதிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்; அதற்கான ஆகச்சிறந்த வழிகாட்டிதான் விகடன் இயர்புக்!
Be the first to rate this book.