அன்பார்ந்த தமிழ் வாசகர்களுக்கு, பிரெஞ்சு, அமெரிக்க ஆதிக்கத்திற் கெதிராகப் போராடிய வியட்நாமியர்களிடம் “யானையை எதிர்க்கும் வெட்டுக்கிளிகளின் போர் ’’ என்று சொன்னவர்களைப் பார்த்து வியட்நாமின் தலைவர் ஹோசிமின், “விமானங்களையும், பீரங்கிகளையும் எதிர்க்க மூங்கில் குச்சிகளைத் தவிர நம்மிடம் ஒன்றும் கிடையாது. ஆனால் மார்க்சியம், லெனினியம் என்ற என்ற தத்துவம் உள்ளது. அதன் வழிகாட்டுதலில் நிகழ்காலத்தை மட்டுமல்ல... எதிர்காலத்தையும் பார்க்க முடிகிறது’’. என்று உலகிற்கு உணர்த்தியவர் ஹோசிமின்.
நாளை யானையின் குடல் பிடுங்கியெறியப்படும் வெற்றியைத் தீர்மானிப்பது ஆயுதங்களல்ல.. வெகு மக்களே” என்ற உண்மையை உலகுக்குப் பறைசாற்றியது தீரமிகு வியட்நாம் புரட்சி. உலகத்தின் அசைக்க முடியாத வல்லரசு எனக் கருதப்பட்ட அமெரிக்கா வியட்நாம் மக்களிடம் படுதோல்வியைச் சந்தித்தது.
பல லட்சம் மக்களின் உயிர் ஈகத்தில் வியட்நாம் வெற்றியை ஈட்டியது. ஆசிய ஆப்பிரிக்க நாடுகளைக் கைப்பற்றும் பிரிட்டனுக்கும் பிரான்சுக்குமிடையிலான போட்டியில் வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்ஸ் தேசத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டன. எனினும் வியட்நாம் மக்கள் ஆக்கிரமிப்புக்கெதிரான போரைத் தீரமுடன் நடத்தினர்.
'வியட்நாம் விடுதலைக்கான சுதந்திரப் போரை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஒன்றிணைந்து போராட்டத்தை வீச்சாகக் கொண்டு சென்றனர். அதன் விளைவாக பிரான்ஸ் வெளியேறியது. அதற்கு காரணம் " எங்கள் கட்சி ஏராளமான புரட்சிகர சக்திகளை தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் அணி திரட்டுவதில் வெற்றி பெற்றது என்று கூறுகிறார் ஹோசிமின்.
இந்தியா போன்ற நாடுகளில் இன்றும் நிலவி வருகிற கடுமையான பொருளாதார நெருக்கடி தேசிய இனங்களின் மீதான நெருக்கடி இவைகளை எதிர்கொள்வதற்கு இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
ஹோசிமின் அவர்களின் முக்கிய சொற்பொழிவுகளையும் கட்டுரைகளையும் தொகுத்து சென்னையிலுள்ள சோவியத் கன்சல் ஜெனரல் அலுவலகம் செய்தித் துறையின் சார்பில் 1972 லெனினும் லெனினிசமும் என்கிற நூலை வெளியிட்டுள்ளது. இந்த நூலில் இருந்து 13 தலைப்புகளை எடுத்து நாம் வியட்நாம் புரட்சி என்கிற தலைப்பில் செஞ்சோலைப் பதிப்பகம் சார்பில் வெளியிடுகிறோம்.
Be the first to rate this book.