நீரின் உருமாற்றம் பெண்ணுடலின் சலனங்களுக்குப் பொருந்துகிறது. ஆணின் மாற்றமில்லாத தட்டையான உடலைவிட பெண்ணுடல் மிகவும் உருமாற்றமுடைய, உற்பத்தி ஆற்றல் பெற்ற உடல். உயிரினங்கள் நீரை ஆதாரமாகக் கொண்டுதான் தோன்றுகின்றன. பெண், குருதி நீரால் ஒரு புது உயிரை உருவாக்கிக் கர்ப்ப நீரில் மிதக்க விடுகிறாள். அச்சிசு அவளிடமிருந்து பிரிந்தவுடன் முலை நீர் ஊட்டி அந்த உடலுக்கு உரமேற்றுகிறாள். இந்த அற்புதம் நீருக்கும் பெண்ணுக்கும் மட்டுமே உரியது. பெண்ணின் மன, உடல், உணர்வெழுச்சியும் அறிவெழுச்சியும் பருவ மாற்றத்திற்கு ஏற்ப மழையாகவோ, அருவியாகவோ, காட்டாறாகவோ, நதியாகவோ, கடலாகவோ, குளமாகவோ மாறிவிடுகின்றன. என்னுடைய நான் நீர். நீருடைய நான், நான்.
Be the first to rate this book.