திப்பு நீதியும் இறையச்சமும் நிறைந்தவர். ஜனநாயகத்தைக் காதலித்தவர். நிலப் பிரபுத்துவத்தை ஒழித்தவர். இதனால் நிலத்தை உழுபவன் அதன் உடைமையாளனாக ஆனான். விளைவு, மைசூர் மக்கள் வழக்கத்திக்று மாறாக வளம் கொழித்தனர். வணிகமும் தொழில்துறைகளும் அதிவேக வளர்ச்சியடைந்தன. ராஜ்ஜியம் எனும் புதிய நகரங்கள் தோன்றி வளர்ந்தன. சுல்தானின் ராணுவம் நவீனமாகவும் நல்ல போர்த் தளவாடங்களுடனும் இருந்தது. சுருங்கக் கூறின் அன்றைய மைசூர் சமகாலத்தில் ஐரோப்பிய அரசுகளுக்கு இணையாக இருந்தது.
திப்புவின் குடிமக்கள் அவர் மீது பேரன்பு வைத்திருந்தனர். ஸ்ரீரங்கப்பட்டணம் வீழ்ந்தபோது அந்நகரவாசிகள் படையெடுப்பாளர்களிடம் வந்து, "எங்களது செல்வங்களையெல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் மைசூரை மட்டும் சுல்தானுடைய வாரிசுகளின் கரங்களில் விட்டுவிடுங்கள்" என்று கோரினர். சுல்தானுக்கு அவரது குடிமக்கள் அளித்த பெரியதொரு காணிக்கை இதைவிட எதுவும் இருக்க முடியாது.
Be the first to rate this book.