மாவீரன் பகத்சிங்கின் வாழ்வுடனும் இயக்கத்துடனும் மிக நெருக்கமாக இருந்தவர் தோழர் சிவவர்மா. தேசிய விடுதலைக்கான இயக்கம் உச்சநிலையில் இருந்த சமயத்தில், பகத்சிங்கும் அவரது தோழர்களும் தொழிலாளர் வர்க்க சித்தாந்தத்தை நோக்கி கவர்ந்திழுக்கப் பட்டுக்கொண்டிருந்த சமயத்தில், பகத்சிங்குடன் இணைந்து நின்று பணியாற்றியவர் என்ற முறையில், தோழர் சிவவர்மா அன்றைய நிகழ்வுகளைச் சரியான கண்ணோட்டத்தில் விவரித்திட மிகச் சரியானவர். புரட்சிகர இயக்கத்தில், அதிலும் குறிப்பாக பகத்சிங் மற்றும் அவரது புரட்சித் தோழர்கள் மத்தியில், படிப்படியாக ஏற்பட்டுக்கொண்டிருந்த மாற்றத்தை வாசகர்களுக்கு மிகச் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார். மற்ற பல வரலாற்றாசிரியர்களால் கண்டுகொள்ளப்படாத பல்வேறு அம்சங்களை, அதாவது பகத்சிங் எப்படி எதிரிகளுக்கு எதிரான தனிநபர் பயங்கரவாத நடைமுறைகளிலிருந்து, வெகுஜன இயக்கத்தைக் கட்டுவதை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தார் என்பதற்கு முக்கிய கவனம் அளித்திருக்கிறார். இதில் மேலும் முக்கியமான அம்சம் என்னவெனில், தேசியவாதம் மற்றும் நாட்டுப்பற்று ஆகியவற்றிலிருந்து, சோசலிச சிந்தனைகள் மற்றும் கம்யூனிசத்தின் இறுதி வெற்றியை நோக்கி அவரது மாற்றம் இருந்ததை தெளிவாகச் சித்தரித்திருக்கிறார்.
Be the first to rate this book.