நூலின் பெரும் பகுதி காந்தியுகத்துப் பெண்களின் வாழ்க்கைக் கதைகளால் நிரம்பி ஒளிர்கிறது. தில்லையாடி வள்ளியம்மை, சொர்ணத்தம்மாள், ருக்மணி லட்சுபதி, கடலூர் அஞ்சலையம்மாள், அம்புஜத்தம்மாள், பர்வதவர்த்தினி அம்மையார் போன்ற பல தமிழகப் போராளிகள் மட்டுமின்றி குஜராத்தின் பத்மாவதி ஆஷர், உஷா மேத்தா , வங்க தேசத்தின் கமலா தாஸ் குப்தா, அஸ்ஸாமின் கனகலதா பரூவா, கிரண் பாலா போரா, கன்னடத்தின் யசோதரம்மா தாசப்பா என்று தேசத்தின் பல நிலப்பரப்புகளின் வீர மகளிரை நமக்கு அறிமுகம் செய்திருப்பது இன்னொரு சிறப்பு.
Be the first to rate this book.