‘பாண்டிச்சி’ என்ற பாராட்டுக்குரிய புதினத்தைப் படைத்துப் புகழ்பெற்றவர் அல்லி பாத்திமா!
அற்புதமான கதாபாத்திரங்களால் நம் இதயங்களில் தனக்கோர் ‘இடஒதுக்கீடு’ செய்தவர்.
கவிதைத் துறையிலும் அவர் தன் கை நேர்த்தியைக் காட்டியுள்ளார்.
மீதி அடுத்த கடிதத்தில் என்னும் அவருடைய முதல் கவிதை -
‘இப்படிக்கு உன் நான்’ என்று முடிகிறது.
கவிதை எங்கே முடிகிறதோ - அங்கே
காதல் தொடங்கிவிடுகிறது.
எத்தனையோ காதல் கவிதைகளை
எழுதியும் படித்தும் ரசித்தவன் நான்.
‘இப்படிக்கு உன் நான்’ & என்ற சொற்களில்
நான் காணாமற்போனேன்.
நேயம்மிக்க நேசர்களையும் ‘காணாமற் போக’ அழைக்கிறேன்.
கவலைப்பட வேண்டாம்.
காணாமற் போனவர்களைக் கண்டுபிடித்து
உங்களை உங்களிடமே ஒப்படைத்திடும்
பொறுப்பினையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்.
அல்லி பாத்திமாவுக்கு என் வாழ்த்துகள்.
அன்புடன்
மு.மேத்தா
Be the first to rate this book.