திருவிதாங்கூர் ஆளுகைக்குட்பட்டிருந்த, நாஞ்சில் நாட்டில் வசதிமிக்க குடும்பத்தில் பிறந்த மகராசன், கிறித்தவத்துக்கு மாறிய நிகழ்வுகளும், ஒடுக்கப்பட்ட மக்கள் நலனுக்காக விளை நிலத்தை தானமாக வழங்கியதும் பாடல்களில் விவரிக்கப்பட்டுள்ளன.
திருவிதாங்கூர் மன்னராட்சியின் போதிலான கயமை, சூழ்ச்சி, வீழ்ச்சி, முறைகேடுகளுக்கு துணை நின்றோரின் கொடுமை, ஒடுக்கப்பட்ட மக்களை மீட்க நடந்த போராட்டங்கள் பற்றி எல்லாம் சொல்லப்பட்டுள்ளது.
போராட்டங்களில் துணை நின்ற கிறித்தவ சமய போதகர்களின் தொண்டுகளையும் அறிய முடிகிறது. ஆங்கிலேயக் கம்பெனி, திருவிதாங்கூர் அரசு, அயல்நாட்டு இறைத்தொண்டர் அமைப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து நடந்த சமூகப் பணிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாஞ்சில் நாட்டின் மருத வளங்களை அழகுற விளக்கும் மொழி நடையும், இலக்கண விருத்தங்களும் நுாலுக்கு வலு சேர்க்கின்றன.
Be the first to rate this book.