கர்ணனைப்பற்றிய நாவல் இது. செவ்வியல் என்பது அனைத்துவகையான புனைவுவகைகளுக்கும் உள்ளே இடமளிப்பது. அதன் இயல்பே தொகுப்புத்தன்மைதான். அதற்குள் ஒருமையையும் ஒத்திசைவையும் அது அடையமுயல்கிறது. அதன் மையத்தரிசனத்தால் அதை நோக்கிச் செல்கிறது. வெய்யோன் இயல்பாகவே பரசுராமனின் கதையிலிருந்து தொடங்கி கர்ணனைக் கண்டடைகிறது. அன்னையென்றும் காதலி என்றும் துணைவி என்றும் பெண்மையால் அலைக்கழிக்கப்படும் கர்ணனின் சித்திரமாக அது விரிகிறது. பெருந்தன்மையால் தோற்றுக்கொண்டே செல்பவன், வென்று நின்றிருக்கும் பேரறத்தின் தருணம் ஒன்றில் நிறைவடைகிறது. பிறநாவல்களுக்கு மாறாக நுண்மையான அன்றாடத்தருணங்கள் நிறைந்த படைப்பு இது. உத்வேகமான புராணக்கதைகளும் எளிய சாகசச் சித்தரிப்புகளும் குறுக்குவாட்டில் புகுந்து இதன் பின்னலை அமைக்கின்றன.
Be the first to rate this book.