ஃபலஸ்தீன உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் உழைத்த, அதற்காகவே கார் வெடிகுண்டுத் தாக்குதலில் இஸ்ரேலிய உளவுத்துறையால் கொல்லப்பட்ட கஸ்ஸான் கனஃபானீ இஸ்ரேலில் தீவிரவாதியாகவும், ஃபலஸ்தீனத்தில் மாபெரும் இலக்கிய ஆளுமையாகவும் போராளியாகவும் போற்றப்படுகிறார். அவர் உருவாக்கிய ‘எதிர்ப்பு இலக்கியம்’, அவருக்குப் பிறகு வந்த எழுத்தாளர்கள் அவரின் அடியொற்றி தமது படைப்புகளை உருவாக்க வித்திட்டது. அவர் துப்பாக்கி தூக்கிச் சுடாத ஒரு தளபதி. பேனாவே அவரின் ஆயுதம். இலக்கியமே அவரின் போர்க்களம். அதே சமயம், அவர் தனது அனுபவங்களை யதார்த்தத்திலிருந்து அச்சிடப்பட்ட பக்கங்களுக்கு நேரடியாக மாற்றுவதற்குப் பதில், அவற்றை நுட்பமான இலக்கியமாக்கி அவற்றுக்கு ஓர் உலகளாவிய அர்த்தத்தை வழங்குவதில் வென்றிருக்கிறார். கதாபாத்திரங்களின் தன்னுணர்வில் நிகழ்காலத்தையும் கடந்தகாலத்தையும் திறமையாகக் கலந்திருப்பதன் வழியாக கனஃபானீ தனது ‘வெய்யில் மனிதர்கள்’ நாவலை ஃபலஸ்தீன இலக்கியத்தில் நீங்கா இடம்பெறச் செய்துவிட்டார்
Be the first to rate this book.