மிக மிகச் சாதாரணமான ஒன்றிலிருக்கும் அசாதாரணத்தைச் சுட்டிக்காட்டுகின்றன மதாரின் கவிதைகள். அறிவார்ந்த பாவனைகள் சிறிதுமின்றி, மிகையின்றி தன் உலகத்தின் மகத்துவங்களுக்குள் அழைத்துச் செல்கிறார். ஊரையே திறக்கும், மூடும் பூக்காரியின் லாவகம் கொண்டிருக்கும் இக்கவிதைகள் விஷேசமான தனிமையை அகத்தே கொண்டவை.
"தனிமையைப் பகிர ஆளிலா கிழத்தி
கடிதம் எழுதுகிறாள்
இறந்துபோன கிழவனுக்கு
எழுதி எழுதிச் சுருட்டப்பட்ட
காகிதங்களில்
காது குடைகிறாள்
திட்டுத்திட்டாய் வருகிறது
பழுப்பு அழுக்கு
கிழவரைப் புதைத்த மணல்"
என்பது போல மாயம் நிகழ்த்தும் கவிதைகள்.
- லக்ஷ்மி மணிவண்ணன்
Be the first to rate this book.