'எது மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறதோ, ஒவ்வொரு வாசிப்பின்போதும் குறையாத சுவையையும், புத்துணர்ச்சியையும் கொண்டிருக்கிறதோ, ஒவ்வொரு மறுவாசிப்பிலும் புதிதாக எதையாவது தருகிறதோ, அதுதான் சிறந்த இலக்கியம' என்ற கூற்றைத் தனது இலக்கிய வரையறையாக ஏற்றுக்கொண்டவர் ஷாராஜ்.
இந்தத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் 90-களில், அவரது ஆரம்ப காலத்தில் எழுதப்பட்டவை. பால்யம் மற்றும் இளமைக் கால நினைவுகளை இயல்பாகவே வாய்க்கப் பெற்றவை. எனவே, இவற்றைக் 'கருப்பு வெள்ளையில் பசுமை நினைவுகள்' என அவர் குறிப்பிடுவது பொருத்தமானதுதான்.
'உயிரும் உணர்வும் உள்ள, சில பத்தாண்டுகள் தாண்டியும் வாழக்கூடிய இப்படிப்பட்ட கதைகளைத் தொடர்ந்து படைத்துக்கொண்டிருந்தாலே போதும்' எனவும் சொல்கிறார்.
Be the first to rate this book.