எழுதுகிறவன் செயல்படும்போது, அவன் அறியாமலே தன் போக்கில் சில முன் திட்டமிடாத கதவுகளைத் திறப்பான், அதை மூடாமலே விட்டு விட்டு இன்னொரு கதவைத் திறக்கப் போய்விடுவான். பாலஜோதியின் ஒரு கதையின் கண்ணி இன்னுமொரு கதையின் கண்ணியில் கோக்கப்படுகிறது. இதில் வரும் மனிதர் அதில் நடமாடுகிறார். உங்களை அந்தக் கதையில் பார்த்தேனே, அவர்தானே நீங்கள்? என்று கேட்டால் ஒன்றும் சொல்லாமல் அவர்கள் நகர்ந்துவிடுகிறார்கள். ஒரு கதை வெயிலை அணிந்தால் இன்னொரு கதை அதைக் களைந்து வைக்கிறது. ஒரு தீனதயாளன் இன்னொரு கதையில் நடமாடுகிறார். ஒரு ஜெயராம் சார் பரோட்டா வாத்தியார் கதையில் ஜே. ஆர். சார் ஆகி சந்திரபாபு பாட்டுப் பாடுகிறார். மருதநாயகம் உட்கார்ந்திருக்கும் ரயில்வே ஸ்டேஷன் பெஞ்சில் சுப்பு அண்ணா உட்கார்ந்திருக்கிறார். சூர்யா ஒரு திருநங்கை என்றால் மகாதேவியும் அப்படித்தான்.
- கல்யாணி.சி
Be the first to rate this book.