ஒரு புத்திசாலியான மனிதன் வெற்றுப் படகைப் போல் இருக்கிறான் என்று சுவாங்தஸு சொல்லுகிறார்.
இப்படித்தான் சரியான மனிதன் இருக்கிறான். அவனுடைய படகு வெற்றுப் படகாக இருக்கிறது. அங்கு உள்ளே ஒருவரும் இல்லை.
நீங்கள் சுவாங்தஸுவையோ அல்லது லாவோஸேயையோ அல்லது என்னையோ சந்தித்தால், அங்கு படகு இருக்கும். ஆனால் படகு வெறுமையாக இருக்கும். அதில் யாருமில்லை. மேலோட்டமாக படகைப் பார்த்தால், அதில் யாரோ இருப்பது போல் தோன்றும். ஆனால் இன்னும் ஆழமாக ஊடுருவிப் பார்த்தால், உண்மையிலேயே என்னிடம் நீங்கள் மிக நெருங்கி இருந்தால், உடலை மறந்து விட்டால், இந்தப் படகைப் போன்று பிறகு நீங்கள் ஒன்றுமில்லாத தன்மையைத் தான் எதிர்கொள்ள முடியும். சுவாங்தஸு மிகவும் அபூர்வமான பிறவி. ஏனெனில், ஒன்றுமில்லாதவராக ஆவது மிகவும் கடினமான காரியம். இது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாதது. ஆனால் இதுதான் இந்த உலகில் மிகவும் முக்கியமான அசாதாரணமான விஷயமாகும்.
Be the first to rate this book.