ஒரு மண்ணின் சரித்திரம் எப்போதுமே அதன் மன்னர்களின் சரித்திரம்தான். மன்னர்கள் இல்லாமல் சரித்திரம் இல்லை. மன்னராட்சி ஒழிந்துவிட்டதாக சொல்வதையெல்லாம் நம்ப வேண்டியதில்லை. இப்போதைய மக்களாட்சியிலும் மன்னர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களின் வடிவம் மட்டும் மாறிவிட்டது. அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒவ்வொருவரும் இங்கே மன்னராக மாறிவிடுகிறார்கள். அதன்பின் தலையிலிருந்து மனதுக்கும் மனதிலிருந்து தலைக்கும் இடம் மாறியபடி இருக்கும் அவர்கள் கிரீடம் எப்போதும் இறங்குவதே இல்லை. அப்படியான மன்னர் குடும்பம் ஒன்றின் கதைதான் இது. இதை எழுதுவதற்கான உந்துகோலாக இருந்த நிகழ்கால, இறந்தகால அரசியல்வாதிகளுக்கும் அவர்கள் செயல்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
- ஷான்
Be the first to rate this book.