பாலியல் எழுத்து என்னும் குறிப்பிட்ட வகைமைக்குள் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு எத்தளத்திலும் தனது படைப்பாளுமையை நிறுவ முடியும் என்பதை இக்கதைகள் மூலம் சாத்தியப்படுத்தியிருக்கிறார் வா.மு.கோமு. காட்சிகளாக விரியும் கதைகளே எண்ணிடலடங்கா அர்த்தங்களை நமக்குள் விதைத்துச் செல்லும். முன்னங்காலை இழந்த சிறுத்தையின் பார்வையில் காட்சிகளாய் விரியும் வானாந்திரம், பூராணாய் மாறி ஊர்ந்து செல்லும் மனிதனின் கனவுலகு,நகரத்து வாடகை வீட்டின் நெரிசலான சூழல்,கிராமத்துக்குள் விசித்திர ஐந்துவாய் உலகும் ஓர் வேற்றுகிரகவாசி என இதனுள் இடம்பெற்றிருக்கும் எல்லாக்கதைகளுமே புதியதோர் பரிமாணத்தை காட்டுபவை. எப்படிப்பட்ட வாழ்க்கைக்குள்ளும் நவீனத்துவத்தை கட்டமைக்கும் கதைகளே நவீன இலக்கிய வடிவம் பெறுகின்றன. வேற்றுகிரகவாசியும் அவ்வகையே........
- கி. ச. திலீபன்
Be the first to rate this book.