வெற்றி எல்லோருக்கும் பொதுவானது. 'வேடிக்கை மனிதரைப் போல் நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ?' என்று வாழ்க்கையின் வெற்றியைப் பற்றி பாடுவார் பாரதியார். ஒருவர் பெற்றிருக்கும் வெற்றிதான் மனிதனின் அடையாளம். அதனால்தான் சின்னக் குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை வெற்றியின் ருசியைத் சுவைத்துவிட துடிக்கிறோம். வாழ்க்கையில் எல்லோரும் வெற்றிப் பந்தயத்தில் கலந்து கொண்டே தீரவேண்டும். எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என துடிக்கிறவர்களுக்கு, எப்படி வெற்றியடைவது என்பது புலப்படவில்லை. 'நீ எத்தனை புயல்களைச் சந்தித்தாய் என்பது பற்றி உலகத்துக்கு கவலை இல்லை. பத்திரமாகக் கப்பலை கரை சேர்த்தாயா என்பதுதான் முக்கியம்' என்று சுவாமி விவேகானந்தர் அன்று சொன்னது இன்று அன்றாட வாழ்க்கையின் ஃபார்முலாவாகிவிட்டது. கப்பலை பத்திரமாகக் கரை சேர்க்கிற வழியை 'ஏழு படிகளாக' விளக்கியிருக்கிறார் 'பிரைம் பாயின்ட்' சீனிவாசன். சின்னச் சின்ன உதாரணங்கள், ஆழம் பொதிந்த வெற்றிக் கதைகள், எளிமையான வழிமுறைகள் என்று வெற்றிக்கான ஏழு படிகளையும் சுருக்கமாகவும், அழகாகவும் விளக்கியுள்ளார்.
Be the first to rate this book.