நாம் கற்க விரும்புகிறோம். நம்மிடமுள்ள திறன்களை வளர்த்துக்கொள்ள விரும்புகிறோம். தொடர்ந்து மேலே மேலே முன்னேறவும் மகிழ்ச்சியோடு வாழவும் விரும்புகிறோம். இருந்தும், நம் லட்சியம் மாய மானைப் போல் விலகி விலகிச் சென்றுகொண்டே இருக்கிறது. அந்த மாய மானைப் பிடிப்பதற்கு ஒரு வழிதான் இருக்கிறது. மாயாவியாக மாறிவிடுங்கள். இந்தப் புத்தகம் அந்த மந்திரத்தை அற்புதமாகச் சொல்லிக்கொடுக்கிறது.
கற்கவேண்டும் என்று விரும்பினால் மட்டும் போதாது; அக்கறையோடும் ஆர்வத்தோடும் எப்படிக் கற்கவேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். திறன்களை வளர்த்துக்கொள்வது முக்கியம்; ஆனால் அதைவிட முக்கியம் உங்களுக்குள் இருக்கும் திறன்கள் என்னென்ன என்பதைக் கண்டறிவது. மகிழ்ச்சி முக்கியம் ஆனால் எது மகிழ்ச்சி என்பது தெரியவேண்டுமல்லவா?
சுவாரஸ்யமான நடையில், ஏராளமான எடுத்துக்காட்டுகளோடும் குதூகலமூட்டும் சிந்தனை வரைபடங்களோடும் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகம் உங்கள் வாழ்வை ஆச்சரியமூட்டும் வகையில் மாற்றியமைக்கப் போகிறது. உடற் பயிற்சி தொடங்கி மனப் பயிற்சி வரை; அறிவியல் தொடங்கி தியானம் வரை அனைத்தையும் புதுமையான முறையில் அறிமுகப்படுத்துவதோடு இவற்றைக் கருவிகளாகக் கொண்டு வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எப்படியெல்லாம் வெல்லலாம் என்பதையும் கற்றுக்கொடுக்கிறது இந்நூல்.
நீங்கள் மேல் படிப்புக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் மாணவரா? வாழ்க்கை மேம்படவேண்டும் என்னும் விருப்பம் கொண்டவரா? உங்கள் மூளையின் ஆற்றலை முழுவதும் பயன்படுத்திக்கொள்ள துடிக்கிறீர்களா? கண்டிப்பாக இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். படிப்படியாக உங்கள் வாழ்க்கை மாறுவதைக் கண்ணாறக் காணுங்கள்.
“இந்தப் புத்தகம் மூளையைச் சிறந்த முறையில் பயன்படுத்து-வதைப் பற்றியது. இந்தக் கலையை அனைவருமே கற்க விரும்புவர். மூளை எப்படி வேலை செய்கிறது, எந்த விஷயம் மூளையைச் சுறுசுறுப்பாக்குகிறது, எதனால் அது சோர்ந்து-விடுகிறது என்பது குறித்து விளக்கும் விலை-மதிப்பில்லாத புத்தகம். இது தொழில் நிபுணர்களுக்கும் அத்தியாவசியமான புத்தகம்.”
- பிரதிபா ஐயர், CEO, Pratima Arts
பாவாவும் தினேஷும் சமுதாயத்தில் இருக்கும் பல பிரிவு மக்களுக்கும் கற்பித்திருக்கின்றனர். அப்பிரிவுகளில், கார்ப்பரேட் கம்பெனிகள் முதல் சேரிகள் வரை, சிறையில் இருக்கும் தீவிரவாதிகள் முதல் தேசத்தின் முதன்மையான கல்வி நிறுவனங்-களில் இருக்கும் வளரும் மனங்கள்வரை அடங்கும்.
இவர்கள் வாழும் கலை அமைப்புக்காகப் பல புதுமையான திட்டப்-பணிகளைச் செய்திருக்கின்றனர். அவற்றுள், புத்தகக் கொடை, குழந்தைக்குக் கல்வி தருதல், மாபெரும் பசுமை திட்டம் (இதில் ஒரு லட்சம் மரங்கள் நடப்பட்டன), ஊழலுக்கு எதிரான பயணம் மற்றும் மும்பை ஹோப் லைன் (தற்கொலைகளைத் தடுக்க உருவாக்கபபட்டது) ஆகியவை முக்கியமானவை.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வழிகாட்டுதலில், வாழும் கலை அமைப்பின் முதன்மை திட்டமான YES!+ (இளைஞர்களுக்கு சக்தியளித்தல் மற்றும் திறன்கள்) என்ற திட்டத்தை உருவாக்கினர். இத்திட்டம் உலகெங்கும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் வழங்கப்படுகிறது.
பாவாவும் தினேஷும் www.youtube.com/bndtv என்ற சேனலை நடத்தி வருகின்றனர். இதில் ஆன்மிகம், உடற்பயிற்சி, கணிதம் முதலான பல்வேறு விஷயங்கள் பற்றிய வீடியோக்கள் இருக்கின்றன. அவற்றில் சில, சில லட்சம் முறை பார்க்கப்பட்டு வைரலாகியிருக்கின்றன. bawandinesh.in என்ற அவர்களின் வலைத்தளத்தில் நீங்கள் அவர்களைப் பற்றிய மேலதிகத் தகவல்களையும் அவர்களின் இடுகைகளையும் வாசிக்க முடியும்.
இவ்விருவரும் வாழும் கலை அமைப்பின் பெங்களூரு ஆஸ்ரமத்தில் இயற்கையான சூழலில் அமைந்துள்ள அழகான இல்லத்தில் நண்பர்கள் சூழ வசிக்கின்றனர். இந்த நண்பர்களே இவர்களின் குடும்பம். அவர்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் இந்தப் புத்தக உருவாக்கத்துக்குப் பங்களித்திருக்கின்றனர்.
Be the first to rate this book.