கடுமையான போட்டி நிலவும் இக்காலத்தில் சில்லறை வியாபாரத்தை நடத்துவது ஒன்றும் சுலபமான காரியமல்ல. ஒவ்வொரு நாளும் வியாபாரம் நடத்தும்போது அன்றைய தினம் லாபமாக இருக்குமா அல்லது நஷ்டத்தில் முடியுமா என்று சொல்லமுடியாது. ஆனால் இதுவே நமக்கு ஒரு ’திரில்’லையும் கொடுக்கிறது! உலகின் தலைச் சிறந்த சில்லறை வர்த்தகர்களின் வெற்றிக்கு ஆதாரமாக இருப்பது என்ன என்பதை ஆராய்வதன் மூலம், சில்லறை வர்த்தகத்தின் நெளிவு சுளிவுகளையும், வெற்றிக்கரமான வியாபார உத்திகளையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது இந்தப் புத்தகம்.
· ஒரு ஸ்டோரை விட்டுவிட்டு இன்னொரு ஸ்டோரை நோக்கி வாடிக்கையாளர் ஈர்க்கப்படுவது ஏன்?
· வாடிக்கையாளரின் விருப்பத்தைக் கண்டறிவதற்கான வழிகள் எவை?
· வெற்றிகரமான டீம்களை உருவாக்குவது எப்படி?
· உங்கள் ஸ்டோருக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது எப்படி?
· சிறப்பான வாடிக்கையாளர் சேவையை அளிப்பது எவ்வாறு?
· லாபத்தை அதிகரிக்கும் வழிகள் எவை?
இது சில்லறை வர்த்தகத்தை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும், அதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் நடைமுறைக் கையேடாக விளங்குகிறது. “வெற்றிகரமான சில்லறை வியாபாரம்’ என்ற இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ரிச்சர்ட் ஹம்மாண்ட். இவர் இத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்துவருபவர். பல பெரிய நிறுவனங்களுக்கும் ஆலோசகராக இருக்கிறார்.
Be the first to rate this book.