தினசரி வாழ்க்கையில் பலவித ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்கும் நமக்கு, தன்னம்பிக்கை வார்த்தைகள்தான் பல்வேறு நிலைகளில் பெரிதும் ஆறுதலாக இருக்கும். சாதாரண மனிதர்களுக்கு வரும் துன்பங்கள், தடைகள், சிக்கல்கள் போன்றவை சாதனை மனிதர்களையும் விட்டுவைப்பதில்லை. ‘துன்பங்களும் துயரங்களும் தவிர வாழ்க்கையில் வேறு என்ன மிச்சம்!’ என்று வாழ்க்கையே வெறுத்து, விரக்தியின் விளிம்புக்கு வந்தவர்கள், நம்பிக்கை எனும் மந்திரக்கயிற்றைப் பற்றிக் கொண்டு எப்படி சாதனை படைத்தார்கள்? துயர நிலைகளை எவ்வாறு கையாண்டால் நாமும் சாதனை மனிதனாக முடியும் என்ற சூட்சமத்தைச் சுட்டிக்காட்டும் அந்த மந்திரச் சொற்கள் இந்த நூலில் பரவிக்கிடக்கிறது: தன்மானத்துக்காக எதையும் இழக்கலாம், ஆனால் எதற்காகவும் தன்மானத்தை இழக்கக் கூடாது! வீழ்வதல்ல, வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி! வசதியாக வாழ்வதல்ல, மகிழ்ச்சியாக இருப்பதுதான் முக்கியம்! விழிகளால் மட்டுமல்ல விரல்களாலும் வெல்ல முடியும்!
Be the first to rate this book.