வெற்றியை விரும்பாதவர்கள் யார்!
உண்மையில், வெற்றி என்பது சிலருக்கு மட்டும் கிடைக்கிற அதிர்ஷ்டம் இல்லை. ஒரு போட்டியில் நூறு பேர் பங்கேற்கிறார்கள் என்றால் ஓரிருவர்தான் வெற்றி பெறுவார்கள். ஆனால், அந்த நூறு பேரும் முன்பு இருந்த நிலையைவிடச் சிறிது முன்னேறியிருப்பார்கள், அதுவும் வெற்றிதான்.
இதுபோல் அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றி எங்கும் வெற்றிக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அவற்றை நாம் கொஞ்சங்கொஞ்சமாகப் பயன்படுத்திக்கொள்கிறோம். அந்த வெற்றிகளையெல்லாம் ஒட்டுமொத்தமாகச் சேர்த்துப் பார்த்தால் நம்முடைய வளர்ச்சி சாத்தியமாகிறது.
அப்படி ஒவ்வொரு நாளும் நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கிற வெற்றி வாய்ப்புகளையும், அவற்றை அடையாளம் கண்டு பயன்படுத்திக்கொள்வதற்கான உத்திகளையும் இந்த நூல் எளிமையாகவும் அழகாகவும் விளக்குகிறது, நம்மை நிரந்தர வெற்றியாளர்களாக ஆக்குகிறது.
Be the first to rate this book.