பச்சியப்பனின் கவிதைகளைப் படித்த அதிர்விலிருந்து இன்னும் மீளமுடியவில்லை. என் இறுதிமூச்சு உள்ளவரை இந்த அதிர்வு இருக்கும். வீசும் அத்தனைக் காற்றும், ஒளிரும் அத்தனை விண்மீன்களும், அசையும் அத்தனை மரங்களும், இந்த இரவும் பகலும், சுடரும் இந்த நிலவும், சூரியனும், வானமும் நிலமும் அனைத்துமே காதலால் செய்யப்பட்டிருப்பது போலவும், அந்தக் காதல் பச்சியப்பனின் கவிதைகளால் செய்யப்பட்டிருப்பது போலவும் உணர்கிறேன். மனதிலிருந்து நேரடியாக விழும் வார்த்தைகள். பச்சியப்பன் கவிதையைப் படைக்கையில், வார்த்தைகளுக்காகக் காத்திருப்பதில்லை. மனதைப் பேச வைப்பதுதான் அவருடைய உத்தி.
தமிழ்ச்சூழலில், ஆண் - பெண் உறவை அற்புதமாகச் சித்திரித்த கவிதை இது. பச்சியப்பன் கவிதைகளில் பல சிறுகதைகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. ஒரு நிகழ்வை எப்படிக் கவிதையாகத் தர வேண்டும் என்ற வித்தை தெரிந்த நம் காலத்தின் மகோன்னதமான கவிஞன் பச்சியப்பன்.
பச்சியப்பன் கவிதை எழுதுவதற்கென்றே பிறந்தவன். தமிழ்க் கவிதையுலகில் அவனுமோர் பெருந்தச்சன்.
- முன்னுரையில் பா. இரவிக்குமார்
Be the first to rate this book.