சென்னை முதல் புதுவை வரையான பயணத்தில் ஒரே மூச்சில் படிக்க ஏதுவான அளவு பக்கங்கள் கொண்ட நாவல். என்னைக் கேட்டால் இதற்கு 'பனஞ்சாடி' பொருத்தம் என்பேன்..
எல்லா வேலைகளையும் இணையத்தின் வழியே இலகுவாக பெற்றுவிட்ட தலைமுறைக்குப் பழைய தலைவலி சமாச்சாரம் தெரியாது. ஒரு மனிதனை பட்டா ரசீது படுத்திய பாட்டை அவர்கள் இனி வரும் காலத்தில் குஜிலி இலக்கியம் போல் பார்க்கக் கூடும். அந்தப் பழம் வாழ்வின் பிரதிநிதி பனஞ்சாடி. ஒற்றை மனிதனின் உலகம் இந்த நாவல். ஒரு மனிதன் என்பது பல மனிதர்கள் சார்ந்த வாழ்வு இல்லையா?
ஊரும் பேரும் எப்படி ஒரு மனிதனின் உருப்பாக ஒட்டி உறவாகிறது என்பதை "வேசடை" வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இளம் தலைமுறைக்கு காட்டானின் வாழ்வை வகைப்படுத்தி சொல்கிறது. காட்டான் என்பவன் அநாகரிகத்தின் அடையாளமாக எப்படி மாற்றப்படுகிறான் என்பதை புடமிட்டுக் காட்டும் குறுவாழ்வே பனஞ்சாடி. இச்சொல்லை பயன்படுத்தும் போது ஓர் இன்பம் இசைகிறது. அந்த இசை எழுத்தின் இசைவு. வாழ்வின் பசலை. இனி வரும் காலத்தில் கேட்க முடியாத கானகத்தின் பசலை பந்தல் இது..
- கடற்கரை மத்தவிலாச அங்கதம்
Be the first to rate this book.